Latestமலேசியா

ஜோகூர் ரமலான் சந்தைகளில் வெளிநாட்டினர் வியாபாரம் செய்ய தடை

ஜோகூர் பாரு, மார்ச் 13 – ஜோகூர் முழுவதிலும் செயல்படும் ரமலான் சந்தைகளில் வெளிநாட்டினர் வணிகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜாஃப்னி MD ஷுகோர் தெரிவித்தார்.

இதனிடையே, வெளிநாட்டவர்களுக்கு ரமலான் சந்தைகளின் தொழில் நடத்தவும் உரிமம் வழங்கப்படாது என பண்டார் பாரு உடாவில் உள்ள ரமலான் சந்தையை பார்வையிட்ட பின் அவர் கூறினார்.

‘ஒருவேளை வெளிநாட்டினார், எந்தவொரு சந்தைகளிலும் ஸ்டால்களை நடத்துவதைக் கண்டாலும், அது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் வழி அவர்களின் விற்பனை பொருட்களை பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கப்படும். இதில் சட்டவிரோத வர்த்தகர்கள் விற்கும் பொருட்களும் பறிமுதல் செய்வதும் அடங்கும்’ என்றார்.

“வெளிநாட்டவர்களும் தங்களால் வியாபாரம் செய்ய முடியாது என்பது தெரியும். ஏனெனில் இது PBT அளவில், குறிப்பாக கிரேட்ட ஜோகூர் பாரு பகுதிகளில் அமைந்துள்ளது. அதலால் தான், ரமலான் சந்தைகளில் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று இது குறித்து டத்தோ முகமட் ஜாஃப்னி விளக்கமளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!