Latestமலேசியா

ஜோகூர் வாழ் இந்தியர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் மாநில அரசு

தேசிய முன்னணி தலைமையிலான ஜோகூர் மாநில அரசாங்கம் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மாநில இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ Onn Hafiz Ghazi தெரிவித்திருக்கிறார்.

ஆலயங்கள், தமிழ்ப் பள்ளிகள், இடுகாடு, வணிகம் உட்பட்ட இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு உரிய கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். அந்த வரிசையில், ஜோகூர் பாருவில் 2 புதியத் தமிழ்ப் பள்ளிகள் நிர்மாணிக்கப்படவிருக்கும் மகிழ்ச்சி தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

தாமான் யூனிவர்சிட்டி, தாமான் இம்பியான் எமாஸ் ஆகிய 2 இடங்களில் தமிழ்ப் பள்ளிகளை நிர்மாணிக்க நிலம் ஒதுக்கப்பட்டு, அரசு மானியமும் வழங்கப்படுமென்றார் அவர்.

இஸ்கண்டார் புத்ரியில் இந்தியச் சமூகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது மந்திரி பெசார் அதனை அறிவித்தார்.

இவ்வேளையில் அதே நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, இந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியச் சமூகத்துக்கு 16.9 மில்லியன் ரிங்கிட்டை மந்திரி பெசார் வழங்கியிருப்பதையும் நினைவுகூர்ந்தார்.

இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் ஆலயங்கள், தமிழ்ப் பள்ளிகள், NGO-கள் ஆகியவற்றுக்கு ஏறக்குறைய 4 மில்லியன் ரிங்கிட்டை அவர் அங்கீகரித்துள்ளார்.

இதனிடையே, மக்கோத்தா சட்டமன்றம் அமைந்திருக்கும், குழுவாங்கில் இந்து ஆலயங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், குழுவாங் புதிய இடுகாடு உள்ளிட்டவற்றுக்காக, ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்போங் மஸ்ஜிட் (Kampung Majid) ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தின் மறுகட்டுமானத்திற்கும் 4 லட்சம் ரிங்கிட் நிதியை டத்தோ Onn Hafiz Ghazi ஒதுக்கியுள்ளார்.

இப்படி மாநில இந்தியர்களின் பிரச்னைகளுக்கு செவிசாய்த்து, உரியவற்றை செய்து வரும் டத்தோ Onn Hafiz Ghaziக்கும் மாநில தேசிய முன்னணி அரசுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ரவின் குமார் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!