ஜெலுபு, மே 19 – Jelebu, Kampung Geylang- கில் 15 மீட்டர் உயரம் கொண்ட டுரியான் மரம் வீட்டின் மீது விழுந்ததைத் தொடர்ந்து அவ்வீடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதோடு அதிலிருந்த 14 பேர் காயம் எதுவுமின்றி உயிர்தப்பினர். தங்களது பாரம்பரிய வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கூடியிருந்தபோது நேற்று காலை 11 மணியளவில் திடீரென அந்த மரம் விழுந்ததாக 42 வயதுடைய Rashidi Ramli கூறினார். சம்பவத்திற்கு முன்னதாக தங்களது குடும்பத்தினர் அனைவரும் அவ்வீட்டிற்குள் இருந்ததாகவும் சிலர் வரவேற்பு அறையிலும் இன்னும் சிலர் சமையல் அறையிலும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
திடீரென வீட்டிற்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அந்த டுரியான் மரம் விழுந்ததது. 15 ஆண்டு காலம் கொண்ட அந்த மரம் கண் இமைக்கும் நேரத்திற்குள் வீட்டில் கார் நிறுத்துமிடம் மற்றும் வரைவேற்பறையில் விழுந்ததாகவும் இதனால் தங்கள் குடும்பத்திற்கு சுமார் 10,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக Rashidi தெரிவித்தார்.