Latestமலேசியா

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மாணவர்களுக்கும் காவலாக ம.இ.கா என்றும் இருந்து வரும் டான்ஸ்ரீ விக்னேஸவரன்

கோலாகங்சார் , பிப் 3 – தமிழ்ப்பள்ளிகளுக்கும், அதில் பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்கு ம.இ.கா என்றும் காவலாக இருக்கும். மேலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புறப்பாட தரத்தை மேலும் மேம்படுத்த தமிழாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியை ம.இ.கா ஏற்பாடு செய்து வருவதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி நிலை தொடர்ந்து வளச்சிக்கண்டு வந்தாலும் எதிர் காலத்தில் மாணவர்களின் கல்வி நிலையை மேலும் மேம்படுத்த ஆய்வினை ம.இ.கா மேற்கொண்டு வருகிறது. அது தொடர்பாக இந்தியவில் உள்ள பல்கலைக் கழகங்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். எம். ஐ. இ. டி . நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பேரா , கோலகங்சாரில் சவுக் எனும் இடத்தில் உள்ள கட்டித் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் அருந்தமிழ் அரங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய உரையின் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பள்ளி வளர்ச்சிக்கு விக்னேஸ்வரன் சொந்த நிதியாக 15,000 ரிங்கிட் வெள்ளி மற்றும் எம்.ஜ. இ.டி. வழி 10 ஆயிரம்.வெள்ளி நிதியை வழங்கினார். இங்கு இந்த மண்டபம் 2 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளி செலவில் நிர்மணிக்கப்பட்டது. அதற்கு அரசாங்கம் மற்றும் பலரும் நிதி வழங்கி ஆதரவு வழங்கியுள்ளதாக பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் வி.சின்னராசு கூறினார். இந்த நிகழ்வில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை விக்னேஸ்வரன் எடுத்துக் வழங்கியதுடன் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதியை வழங்கினார். இதில் மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!