கோலாலம்பூர், ஜூலை 15 – தலைநகரில், ஜாலான் துன் எச்எஸ் லீ மற்றும் ஜாலான் மெட்ரோ புடு 2 சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள, கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில், மது அருந்திய 43 முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம், Jawi எனும் கூட்டரசு பிரதேச இஸ்லாமியத் துறை மற்றும் தேசிய போதைப் பொருள் துடைத்தொழிப்பு நிறுவனத்துடன் இணைந்து அந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
கைதுச் செய்யப்பட்ட 43 பேரில்,16 பேர் ஆண்கள். எஞ்சிய 27 பேர் பெண்கள் ஆவர்.
அவர்கள் அனைவருக்கும், ஜாவி அமலாக்கா பிரிவில் ஆஜராக வாரண்ட் வழங்கப்பட்டது.
இவ்வேளையில், அதே சோதனை நடவடிக்கையின் போது, போதைப் பொருள் உட்கொண்டிருந்த எழுவர் கைதுச் செய்யப்பட்டதையும், கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.
முறையான அனுமதி இன்றி, மதுபானங்களை விற்பனை செய்த, இரு கேளிக்கை மையங்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளை ; இரு அபராத பதிவுகளும் வெளியிடப்பட்டன.