Latestமலேசியா

திடீர் பிரேக் காரணமாக LRT இரயில் கண்ணாடி உடைந்து பெண் காயம்? சமூக ஊடகங்களில் புகைப்படம் வைரல்

கோலாலம்பூர், ஜூன்-25-LRT இரயில் திடீரென பிரேக் போடப்பட்டதால், அதன் கண்ணாடி உடைந்து சிதறியதாகக் கூறி, Threads சமூக ஊடகத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில் இரயிலில் பயணித்த பெண் ஒருவரின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ​வைரல் புகைப்படத்தில், இரயிலின் நீல நிற இருக்கை மற்றும் தரைப்பகுதியில் கண்ணாடித்துண்டுகள் சிதறிக்கிடப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த விபத்து குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவலான விவாதங்களை எழுப்பியுள்ளது.

​இருப்பினும், இந்தச் சம்பவம் எங்கு, எப்போது நிகழ்ந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

LRT அதிகாரத் தரப்பும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!