Latestமலேசியா

திருவனந்தபுரம் கோலாலம்பூருக்கான ஏர் ஆசியாவின் முதலாவது விமானச் சேவையில் இடம்பெற்றிருந்த 133 பயணிகளை சுற்றுலா அமைச்சர் Tiong Kim Sing போ லிங்கம் வரவேற்றனர்

கோலாலம்பூர், பிப் 22 – இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொச்சினுக்கு அடுத்து திருவனந்தபுரம் – கோலாலம்பூருக்கான ஏர் ஆசியாவின் முதலாவது விமானச் சேவையில் இடம்பெற்றிருந்த பயணிகளை சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ Tiong Kim Sing மற்றும் ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி Bo Lingam ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையைத்தில் தரையிறங்கிய அனைத்து பயணிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

அதோடு முக்கிய பிரமுகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் AK 8 விமானத்தில் தரையிறங்கிய பயணிகள் பெற்றனர்.

மலேசியா மற்றும் இந்தியாவுக்குமிடையே சுற்றுப்பயணிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை கொண்ட திருவனந்தபுரம் – கோலாலம்பூர் விமானச் சேவையை தொடங்கிய ஏர் ஆசிய குழுமத்திற்கு டத்தோஸ்ரீ Tiong King Sing தமது பாராட்டை தெரிவித்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் மேலும் அதிகமான இடங்களுக்கு நேரடி விமான சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை ஏர் ஆசியா கொண்டிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி Bo Lingam தெரிவித்தார்.

இதனிடையே திருவனந்தபுரம் – கோலாலம்பூருக்கான முதல் விமானச் சேவையில் 133 பயணிகள் வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாக கருதுவதாக ஏர் ஆசியா குழுமத்தின் விமான நிலையம் மற்றும் பயனீட்டாளர் தலைமை அதிகரி கேசவன் சிவானந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Kesavan Sivanandan Interview

Closing :

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் பல்வேறு வரலாறு மற்றும் கலச்சார மையங்களை கொண்டதாக திருவனந்தபுரம் திகழ்வதால் அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்கு குறைந்த விலையில் திருவனந்தபுரம் செல்வதற்கு மலேசிய சுற்றுப்பயணிகளுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் போ லிங்கம் கூறியுள்ளார்.

குறைந்த விமான கட்டணத்தில் இந்திய பிரஜைகள் மலேசியாவுக்கு வருகைபுரிவதற்கும் அதே வேளையில் இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் மலேசியர்கள் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புக்களை ஏர் ஆசியா வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!