Latestமலேசியா

தீபாவளிக்கு மாநில பொது விடுமுறை வழங்க சரவாக் அரசிடம் பரிந்துரைப்பேன்; துணைப் பிரதமர் ஃபாடில்லா உறுதி

கூச்சிங், நவம்பர்-10, தீபாவளியை மாநில பொது விடுமுறையாக அறிவிக்குமாறு சரவாக் அரசாங்கத்திடம் தாம் பரிந்துரைக்கவிருப்பதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் (Datuk Seri Fadillah Yusof) கூறியுள்ளார்.

அது, சரவாக் வாழ் இந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பதை தாமும் மாநில அரசும் நன்கறிந்திருப்பதாகக் கூறிய ஃபாடில்லா, தாமே அதனை மீண்டும் அரசின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லவிருப்பதாகச் சொன்னார்.

கூச்சிங் இந்தியர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பங்கேற்ற போது துணைப் பிரதமர் அவ்வாறுக் கூறினார்.

தீபாவளிக்கு சரவாக்கில் பொது விடுமுறை வழங்க வேண்டுமென்ற மாநில இந்தியர்களின் கோரிக்கை ஆராயப்படுமென, சரவாக் பிரீமியர் தான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓப்பேங் (Tan Sri Abang Johari Tun Openg) ஏற்கனவே கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!