Latestமலேசியா

தும்பாட்டில் குடியேறிகள் கடத்தல் முறியடிப்பு: ‘டொன்டோ’ பெண்கள் உட்பட 12 பேர் அதிரடி கைது

தும்பாட், ஏப்ரல்-20-கிளந்தான், தும்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோத குடியேறிகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுச் செய்தனர்.

அவர்களில் கூலிக்கு அதிகாரிகளைக் கண்காணிக்கும் tonto-வாகச் செயல்பட்ட இரு இளம் பெண்களும் அடங்குவர்.

​கைதுச் செய்யப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.

அந்த 9 பேரில் ஏழு பேர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இருவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் தாய்லாந்து எல்லை வழியாக முறையான பயணப் பத்திரங்களின்றி மலேசியாவுக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

​மேலும், குடியேறிகளைக் கடத்திச் செல்லும் வாகனமோட்டியாகச் செயல்பட்ட 24 வயது உள்ளூர் இளைஞர் ஒருவரும், அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளம் பெண்களும் கைதுச் செய்யப்பட்டனர்.

​கடத்தப்படும் ஒவ்வொரு குடியேறிக்கும் அந்த இளைஞருக்கு 100 ரிங்கிட்டும், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு 150 ரிங்கிட்டும் ஊதியமாக வழங்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கைதான அனைவரும் மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!