
செத்தியூ, ஏப்ரல்-20-திங்கானு, செத்தியூவில் உள்ள Lata Ulu Kasar நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிய தனது தோழியைக் காப்பாற்ற முயன்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
UMT எனப்படும் மலேசியத் திரங்கானு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயது Suraya Hassan என்பவரே இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானார்.
ஜோகூர், பத்து பஹாட்டைச் சேர்ந்த இவர், தனது நண்பர்கள் ஏழு பேருடன் அங்கு கேளிக்கை சுற்றுலா சென்றிருந்தார்.
நேற்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, Adilah என்ற மாணவி நீரில் தத்தளிப்பதைக் கண்ட Suraya, Nur Najwa Farina ஆகிய இருவரும் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
இருப்பினும், எதிர்பாராத விதமாக Suraya பலத்த நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கினார்.
அவருடன் சென்ற Nur Najwa மயிரிழையில் உயிர் தப்பினார்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் Suraya-வின் உடலை மீட்டனர்.
Nur Najwa தற்போது செத்தியூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



