Latestமலேசியா

தேசிய மொழி ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி – அன்வார்

கோலாலம்பூர், ஜன 5 – மலேசியர்கள் மற்றும் நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள் தேசிய மொழியான “Bahasa Melayu”-வில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். தேசிய மொழியில் தேர்ச்சி பெறுவது தேசிய பெருமையை மட்டுமல்ல, ஒரு நாட்டின் அடையாளத்தையும் உருவாக்குகிறது என அவர் தெரிவித்தார். அவ்வாறு செய்வது மறைமுகமாக ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகுக்கும் என்றும், இது இன்றைய காலகட்டத்தில் சமமான முக்கியத்துவத்தை கொண்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் தேசிய மொழியில் ஆளுமையை கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு இதைச் செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம். இதனால் மறைமுகமாக நீங்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறத் தொடங்குவீர்கள். இதை நாம் இப்போதே தொடங்கும் நாளாக இன்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார் அன்வார்.

உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளூர் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற உரையாடல் அமர்வின் போது, பேராசிரியர்கள் தங்கள் மாணவர்கள் படிக்க நல்ல புத்தகங்களை அடையாளம் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு அவர்களின் தேர்ச்சியும் ஆங்கில அறிவும் முதன்மையானது என அவர் தெரிவித்தார்.

சரளமாக தாய் மொழி பேசும் தாய்லாந்தின் உதாரணத்தை அன்வார் சுட்டிக்காட்டினார். அவர்களும் இப்போது ஆங்கிலம் பேசுவதற்கு மாறியுள்ளனர், அங்குள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்கள் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன என்று கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!