Latestமலேசியா

தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது

தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள்.

தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு CPR முதலுதவிகள் வழங்கப்பட்டன; எனினும் அவள் உயிரிழந்ததை மருத்துவர்கள் பின்னர் உறுதிச் செய்தனர்.

சவப்பரிசோதனையில், சிறுமியின் உடலில் காயத் தளும்புகள் கண்டறியப்பட்டன.

குறிப்பாக, தலையிலும் கழுத்திலும் பலமாக அடிக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என உறுதிச் செய்யப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் போலீஸில் புகார் செய்ய, பெற்றத் தாய் உட்பட 27 முதல் 53 வயது வரையிலான குடும்ப உறுப்பினர்கள் நால்வர் கைதாகினர்.

கொலை விசாரணைக்காக, அவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!