Latestமலேசியா

நாடு முழுவதிலும் 384 கல்வி நிலையங்களில் இலக்கவியல் வசதிகள் மேம்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஜூன் 2 – நாடு முழுவதிலும் உள்ள 384 கல்வி நிலையங்கள் முழுமையான இலக்கவியல் வசதிகளை கொண்டிருக்கும் வகையில் அவை மேம்படுத்தப்படும் . ஆசிரியர்களின் செயல்பாட்டு மையம் உட்பட ஆற்றல் மற்றும் போட்டியிடும் தன்மையை மேம்படுத்துவதற்காக இலக்கவியல் ஸ்டோடியோ மற்றும் இலக்கவியல் மையங்களை கொண்டிருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.

384 இடங்களில் ஆசியர்கள் நடவடிக்கை மையங்களை மேம்படுத்துவற்கான துரித நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என அவர் கூறினார். ஆசிரியர்களின் நடவடிக்கை மையங்கள் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளுடன் இலக்கவியல் சாதனங்கள் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆற்றலை அதிகரிக்கும் நேக்கத்தை அமைச்சு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நேற்று தேசிய அறிவியல் மையத்தில் MyDigitalMaker Fair 2024 கண்காட்சியை தொடக்கிவைத்தபோது Fadhlina இத்தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை துணையமைச்சர் Wong Kah Woh மற்றும் மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழக தலைவர் Syed Ibrahim Syed Noh ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!