Latestமலேசியா

நாட்டின் நடப்பு விவகாரங்கள் குறித்து அறிக்கை வெளியிடும் தார்மீக நிலை முஹிடினுக்கு கிடையாது – பாமி கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப் 22 – Perikatan Nasional தலைவர் டான்ஸ்ரீ Muhyiddin Yassin முகைதின் யாசினுக்கு அரசியல் பிரச்சினைகள் உட்பட நாட்டின் நடப்பு விவகாரங்கள் குறித்து அறிக்கை வெளியிட எந்தவொரு தார்மீக நிலையும் இல்லை என்று பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் Fahmi Fadzil தெரிவித்திருக்கிறார் . தனது மருமகன் டத்தோஸ்ரீ Muhammad Adlan Berghan , நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவும் MACC அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படி வலியுறுத்த Muhyiddin தவறியதே இதற்குக் காரணம் என தொடர்பு அமைச்சருமான Fahmi சுட்டிக்காட்டினார்.

Kuala Kubu Baharu இடைத்தேர்தலைப் பற்றி பேச வேண்டாம். உங்கள் மருமகனை மீண்டும் அழைத்து வாருங்கள், பின்னர் நீங்கள் பேசுவதற்கு சிறந்த நிலையில் இருப்பீர்கள். ஏனெனில் Muhammad Adlan நீதியிலிருந்து தப்பி ஓடியவர் என Fahmi தெரிவித்தார். தனது மருமகனை மலேசியாவுக்குத் திரும்புவதற்கும் , தொடங்கப்பட்ட MACC விசாரணையை எதிர்கொள்ளவும் வலியுறுத்துவதன் மூலம் Muhyiddin சிறந்த முன்மாதிரி தலைவராக திகழ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வீட்டுக் காவலை எதிர்நோக்குவற்கான கூடுதல் உத்தரவு தொடர்பாக பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஒற்றுமை அரசாங்கம் பிளவுபடும் நிலையில் இருப்பதாக Muhyiddin கூறியிருந்தது குறித்து வினவப்பட்டபோது Fahmi இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!