Latestமலேசியா

நெடுஞ்சாலையின் ஓய்வு எடுக்கும் இடத்தில் தற்செயலாக விடப்பட்ட இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒன்று சேர்வதற்கு போலீசார் உதவினர்

செப்பாங், மார்ச் 25 – நெடுஞ்சாலையின் ஓய்வு நிறுத்தத்தில் தற்செயலாக விட்டுச் செல்லப்பட்ட இரு குழந்தைகள், காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் அவர்கள் பெற்றோருடன் மீண்டும் இணைந்தனர்.

திங்கட்கிழமை மாலையில் சுங்கை மெராப் ( Sungai Merap) ஓய்வு நிறுத்தத்தில் நின்ற பிறகு, ஒரு தம்பதியினர் சாலை பரிசோதனை இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் குழுவை அணுகி தங்களது கவலையை தெரிவித்தாக செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நோர்ஹிஷாம் பஹாமான் (Norhizam Bahaman ) தெரிவித்தார்.

தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இரண்டு லேன்ஸ் காப்பரல்களான , ரோட்ஷெரி அடெர்லி ராடேன் ( Rodzery Adderly Raden ) முகமட் அமிருல் பாஸி முகமட் சுக்ரி ( Mohamad Amirul Fazi Mohamed Shukri ) ஆகியோர் அந்தக் குடும்பத்தை விரைவாக ஓய்வு நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் அந்த குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இணைவதற்கு வழிவகுத்தது என Norhizam Bahaman வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த சமூக ஊடகப் பதிவும் இணையத்தில் பதிவேற்றப்பட்டது. அந்தப் பதிவில், போலீஸ் வாகனம் ஒன்று அந்தக் குடும்பத்தை ஓய்வு நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வது காட்டப்பட்டது.

அத்துடன் ஓய்வு நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் பயணித்த பிறகே குழந்தை காணாமல் போனதை அந்தக் குடும்பம் கவனித்ததாக பெற்றோரின் வாக்குமூலமும் அந்த காணொளியில் பதிவிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!