Latestமலேசியா

பத்தாங் காலியில் நீர் பெருக்கில் 3 ஏமன் பிரஜைகள் சிக்கினர்

கோலாலம்பூர், மே-4-Batang Kali Sungai Kedondong நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​ஏமன் நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகள் நேற்று நீர் பெருக்கில் சிக்கிக் கொண்டதால் நெருக்கடியான தருணத்தை எதிர்நோக்கினர்.

மாலை மணி 4.12 க்கு இந்த சம்பவம் குறித்து தமது குழுவுக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு , மீட்புக் குழுவின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பொதுமக்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

அதே சமயம், கையில் காயமடைந்து மூன்று மீட்டர் உயரமான செங்குத்தான பாறையின் விளிம்பில் இருந்த மற்றொருவர், தீயணைப்புத் துறையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகமட் முக்லிஸ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!