Latestமலேசியா

பத்து பூத்தே விவகாரம் மீதான அரச விசாரணையில் பங்கேற்க மறுத்தால் மகாதீர் கைதாகலாம் வழக்கறிஞர் கருத்து

கோலாலம்பூர், பிப் 23 – Batu Puteh  மீதான அரச விசாரணையில்   கலந்து கொள்ள மறுத்தால்  முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதீர் கைது செய்யப்படலாம்  என்று வழக்கறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.  1950 ஆம் ஆண்டின் விசாரணை ஆணையத்தின் சட்டத்தின்  8ஆவது விதியின் கீழ் , சாட்சிகளை நேரில் ஆஜராகும்படி உத்தரவிடும் அதிகாரம்   அரச விசாரணை  ஆணையர்களுக்கு  இருபபதாக   வழக்கறிஞர்  S.N  நாயர்   தெரிவித்தார்.  அரச விசாரணையில் பங்கேற்கும்படி  எந்தவொரு நபருக்கும்  ஆணையம் உத்தரவிட முடியும்.  

 Batu Puteh  தீவு விவகாரம் தொடர்பான விசாரணையில்  இரண்டு முறை  பிரதமராக இருந்துள்ள டாக்டர் மகாதீர் முக்கிய சாட்சியாக திகழ்வார் என  இதற்கு முன் இரண்டு அரச விசாரணை  குழுவில்    சாட்சியாக பிரதிநிதித்துள்ள  S.N  நாயர்   சுட்டிக்காட்டினார். Batu Puteh   மீதான அரச விசாரணைக் குழுவின்  தலைவராக முன்னாள்  தலைமை நீதிபதி   Raus Sharif   இருக்கும்வரை  விசாரணையில்  மகாதீர் பங்கேற்கமாட்டார் என அவரது வழக்கறிஞர்  Rafique Rashid Ali கூறியிருந்தது குறித்து  Nair   வெளியிட்ட கருத்தில் இதனை  தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!