Latestமலேசியா

பல்வேறு இனங்களின் ஒற்றுமையே எனது பிறந்தநாளுக்கு கிடைக்கக்கூடிய அர்த்தமுள்ள பரிசு – பேரரசர் சுல்தான் இப்ராஹிம்

கோலாலம்பூர், மார்ச் 24 – மலேசியாவின் பல இன மக்களின் ஒற்றுமைத்தான் தமது பிறந்தநாளுக்கான அர்த்தமுள்ள பரிசாக அமையமுடியும் என பேரரசர் சுல்தான் Ibrahim எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன, மத பேதமின்றி மக்கள் வெளிப்படுத்தும் நல்லிணக்கமும், சுமூக உறவுக்கான மனப்பான்மையும் நாட்டின் நிலைத்தன்மைக்கு இன்றியமையாதது என நேற்று ஜோகூர் சுல்தான் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு தமது முகநூலில் Sultan Ibrahim பதிவிட்டுள்ளார்.

எனது பிறந்தநாளுக்கு, நான் கேக், பழங்கள் மற்றும் பூக்களைப் பரிசாகப் பெற்றேன். அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், எனக்கு மிகவும் அர்த்தமுள்ள பரிசாக அமையக்கூடியது, நாட்டின் பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமையாகும். அதுவே நாட்டின் செழிப்புக்கான திறவுகோலாகும் என பேரரசர் கூறினார்.

அந்த அடிப்படையில்தான் ஜொகூரில், எப்போதும் பங்சா ஜோகூர் கோட்பாட்டை வலியுறுத்தி வருகிறேன். ஜோகூரில் பல்வேறு இன மக்களை ஒன்றிணைப்பதில் இது பெரும் பங்காற்றியுள்ளது என Sultan Ibrahim பதிவிட்டுள்ளார்.

அதேசமயத்தில் மாநிலத்தில் உள்ள பல இன மக்களுக்கு உதவுவதில் ஜோகூர் அரச அறக்கட்டளை நல்கும் உதவிகளையும் நன்கொடைகளையும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேரரசர் Sultan Ibrahim மிற்கு தமது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!