
குவா மூசாங், மே-13-பள்ளி விடுதியில் சுயநினைவின்றி காணப்பட்ட மாணவன் கிளினிக்கில் இறந்தான்.
தலையில் திடீரென ஏற்பட்ட இரத்தக் கசிவு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்ததன் காரணமாக, அந்த மாணவன் நேற்று உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
முன்னதாக, KESEDAR பாலோ நில மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி தங்கும் விடுதியில் தனது 13 வயது மகன் சுயநினைவின்றி இருப்பதாக நேற்று காலை ஆடவர் ஒருவர் கூறியிருந்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சிக் சூன் பூ ( Sik Choon Foo ) கூறினார்.
பிறகு அந்த மாணவனைச் சிகிச்சைக்காக Chiku 3 சுகாதார கிளினிக்கிற்கு பள்ளி அதிகாரிகள் கொண்டுச் சென்றனர்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவன் இறந்துவிட்டதை கிளினிக்கிலுள்ள மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவனது உடல் சவ பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அவனது மரணத்தில் எந்தவொரு சூதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதோடு, இந்த விவகாரம் தொடர்பாக தேவையில்லாத ஆருடங்கள் எதனையும் தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.



