Latestமலேசியா

நாட்டில் பெரும்பாலான இடங்களில் வானிலை வெப்பமாக உள்ளது – மெட்மலேசியா

கோலாலம்பூர், மே-13-நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மற்றும் வெயில் நிறைந்த வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

இன்று நண்பகல் நிலவரப்படி, பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை சுமார் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ்வரை பதிவாகியுள்ளது. கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா மற்றும் கங்கார் ஆகிய இடங்களில் வெயில் நிறைந்த வானிலையுடன் தலா 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் மெட் மலேசியா இணையத் தளத்தி தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவுசெய்த கூச்சிங் , மிகவும் வெப்பமான பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

அதே நேரத்தில், கோத்தா கினபாலுவில் வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ் , மற்றும் லபுவானில் வெப்ப நிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Kuala Trengganu மற்றும் Kota Bahru உள்ளிட்ட பல இடங்களிலும் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அலோஸ்டாரில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

புத்ராஜெயா, ஈப்போ, குவாந்தன் மற்றும் குவாலா பிலா (Kuala Pilah ) பகுதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பயான் லெபாஸ் மற்றும் செனாய் ஆகிய இடங்களில் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!