Latestமலேசியா

பழைய நீர் குழாய்களை மாற்றுவதில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் – ஸ்பான் பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, பிப் 23-  பயனற்றுப் போகும் நீர் மேலாண்மை (NRW) பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வருடாந்திர நிதியாக 1,000 கோடி  ரிங்கிட்டை மாநில அரசுகளுக்கு  வழங்க வேண்டும் என்று தேசிய நீர் சேவை ஆணையம் ( SPAN ) பரிந்துரைத்துள்ளது. பயன் தராமல் போகும் நீர் பிரச்சினையால் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 800 கோடி   ரிங்கிட்டை  இழந்துள்ள வேளையில் அந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது  என்று SPAN   தலைவர் சார்லஸ் சன்டியாகோ தெரிவித்திருக்கிறார்.

இந்த பிரச்னைக்கு  தீர்வு காணப்படாவிட்டால்  அடுத்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 2,000 கோடி ரிங்கிட்டை  இழக்க நேரிடும். பயனற்றுப் போகும் நீரின் அளவைக் குறைப்பதற்கு ஏதுவாக மாநிலங்களில்  பழுதடைந்த குழாய்களை  மாற்றுவதற்கு உதவும் வகையில் ஆண்டுக்கு 1,000 கோடி  ரிங்கிட்   நிதியை அரசாங்கம் வழங்கும் என்று தாம் நம்புவதாக  அவர் கூறினார்.  Jaya One வர்த்தக மையத்தில்  பிஜே லைவ் ஆர்ட்ஸில் நடைபெற்ற உலக வெப்ப மயம்  மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வரங்கில்  கலந்து   கொண்டு உரையாற்றிய போது  சார்லஸ் சன்டியாகோ இத்தவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!