Latestமலேசியா

பஹாங்கில் அதீத வெப்ப தாக்கம் காரணமாக ஒருவர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 25 – கடுமையான வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் பாதிப்பின் காரணமாக பகாங்கில் ல் 22 வயதுடைய இளைஞர் மரணம் அடைந்திருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ Ahmad Zahi Hamidi தெரிவித்திருக்கிறார். அந்த மரணம் பிப்ரவரி 2 ஆம் தேதி Maran னில் நிகழ்ந்ததாக அவர் கூறினார். நாட்டில் மூன்றாவது வெப்ப அலை ஏற்படாமல் இருப்பது குறித்து நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். பருவ நிலை மாற்றத்தினால் எந்த நேரத்திலும் மூன்றாவது வெப்ப அலை ஏற்படலாம் என்பதோடு காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் படலத்தின் சிதைவு ஆகியவை நம் நாட்டிலும் ஏற்படுவதற்கான வழிவகையை கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் இது நிகழலாம் என Ahmad Zahid சுட்டிக்காட்டினார்.

“தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் மலேசிய ஆயுதப்படைகள் சில குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் செயற்கை மழையை பொழியவைப்பதற்கான மேக விதை தூவும் நடவடிக்கையினால் நிலைமையை சமாளிப்ப முடியும் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் மேக விதைப்புக்கு 100,000 ரிங்கிட் செலவாகும் என்றாலும் செயற்கை மழையை பொழிய வைப்பதற்கு மேகங்களும் பொருத்தமான காற்றும் தேவையென Ahmad Zahid சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!