Latestமலேசியாவிளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அசத்திய மலேசிய பூப்பந்து வீரர்கள், நாடு திரும்பினர்; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – 2024ஆம் ஆண்டின் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்து நாட்டிற்குப் பெருமை சேர்ந்த 8 பூப்பந்து விளையாட்டு வீரர்கள், இன்று மலேசியாவிற்குத் திரும்பினர்.

கலப்பு இரட்டையர்களான சென் தங் ஜி -தொ இ வெய் (Chen Tang Jie – Toh Ee Wei) ஜோடி, ஆடவர் இரட்டையர் போட்டியின் ஜோடி ஆரன் சியா – சோ வுய் இக் (Aaro Chia – Soh Wooi) ஜோடி, மகளிர் இரட்டையர்களான எம் தினா – பியரிலி தான் (M. Thinaah – Pearly Tan), ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டக்காரரான லீ சி ஜியா (Lee Zii Jia) மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டக்காரர் கோ ஜின் வெய் (Goh Jin Wei) ஆகியோர் நம் பெருமையைத் தாங்கி நாடு திரும்பியிருக்கின்றனர்.

இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவிலும், ஒற்றையர் ஆட்டத்திலும் மலேசியா வெண்கலத்துடன் நாடு திரும்பியிருக்கிறது.

இவ்வேளையில், வெண்கலப் பதக்கத்துடன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பூப்பந்து வீரர்கள், தங்களின் அனுபவங்களை ஊடகவியளார்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

பல சவால் மிகுந்த வீரர்களைக் கடுமையாகப் போட்டி கண்டு வந்த வீரர் வீராங்கனைகளை மலேசியா மக்கள் அனைத்துலக கோலாலம்பூர் விமான நிலைய Terminal 1-யில் ஆரவாரத்துடன் வரவேற்றுப், பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!