Latestஇந்தியாஉலகம்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்திய தேர்தலில் வெற்றி பெறுவார்; கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன

புதுடில்லி, ஜூன் 2 – குறைந்தது ஆறு வாரங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்களிப்பு நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவு செவ்வாக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றபபோதிலும் மோடி வெற்றி பெறுவார் என அரசியல் ஆய்வாளர்கள் முன்கூட்டியே தெரிவித்திருக்கின்றனர்.
கருத்துக் கணிப்புகள் அவர் வெற்றிபெறும் பாதையில் நன்றாக இருப்பதாகவும், மோடி வெற்றி பெறுவது உறுதி என்றும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தனது அரசாங்கத்தை மீண்டும் தேர்ந்தெடுக்க இந்திய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். எங்கள் சாதனை மற்றும் எங்கள் பணி ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வந்த விதத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்று அவர் சமூக ஊடக தளமான
X இல் தெரிவித்துள்ளார்.

மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 355 இடங்களை வெல்லும் என்றும் இது மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை விட அதிகமாகும் என CNN news 18 கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இருந்தபோதிலும் ஒரு பில்லியன் தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் பொதுமக்களின் நம்பிக்கையை கைப்பற்றுவதில் இத்தகைய கணிப்புகள் கடந்த காலங்களில் நம்பகத்தன்மையற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. மோடியின் தொகுதியான Varanasi யில் நேற்று வாக்களித்த பலர், அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக இருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!