
பிரான்ஸ், ஜூன் 29 – பிரான்சில் கடந்த ஜூன் 24 முதல், கடுமையான வெப்ப தாக்கம் ஏற்பட்டதால், 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வீடுகளில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை 40 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை சில பகுதிகளில் குறைந்தாலும், பாரிஸ் உட்பட 22 பகுதிகளில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது. முதியவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



