Latestஉலகம்

பிரிட்டன் தேர்தலில் கன்செர்வெட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் -கருத்துக் கணிப்பு தகவல்

லண்டன், ஏப் 4 -இவ்வாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பிரிட்டன் தேர்தலில் பிரதமர் Rishi Sunak தலைமையிலான Conservative கட்சி எதிர்க்கட்சியான தொழில் கட்சியிடம் பெரும் தோல்வியை சந்திக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. தொழில் கட்சி 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களை கைப்பற்றும் என YouGov Model நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனிலுள்ள மொத்தம் 650 நாடாளுமன்ற தொகுதியில் Conservative கட்சி 155 இடங்களை மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாண்டின் இரண்டாவது அரை ஆண்டில் பிரதமர் Rishi Sunak தேர்தல் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு முதல் Conservative கட்சி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ அரசாங்கத்தில் இருந்துள்ளது. இந்த காலக் கட்டத்தில் ஐந்து வெவ்வேறு பிரதமர்கள் பதவியில் இருந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு வாக்களிப்பு நடத்தியது மற்றும் கோவிட் விவகாரத்தை கையாள்வதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகளால் பிரிட்டன் தொடர்ந்து அரசில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!