Latestமலேசியா

பீடோர் தற்காலிக குடிநுழைவு மையத்தில் தப்பியோடிய 130 பேரில் 6 பேர் பிடிபட்டனர்

கோலாலம்பூர், பிப் 3 – பீடோரிலுள்ள தற்காலிக குடிநுழைவு தடுப்பு மையத்தில் நிகழ்ந்த கலவரத்திற்குப் பின் தப்பியோடிய 130 ரோஹிங்யா மற்றும் மியன்மார் கைதிகளில் 6 பேர் பிடிபட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை தாப்பா போலீஸ் மற்றும் குடிநுழைவுத்துறை உறுதிப்படுத்தியது. எஞ்சிய மற்றவர்களை மீண்டும் பிடிப்பற்தக்கான நடவடிக்கை முழுவீச்சில் எடுக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார். பல்வேறு அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த 387 பேர் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். வியாழக்கிழமை இரவு அந்த குடிநுழைவு முகாமில் ஏற்பட்ட கலவரத்திற்கு பின்னர் அங்கிருந்து 131 பேர் தப்பிச் சென்றனர்.

அவர்களில் ஒருவர் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 335ஆவது கிலோமீட்டரில் நிகழந்த விபத்தில் மரணம் அடைந்தார். தப்பியோடிய சந்தேகப் பேர்வழிகளில் 115 பேர் ரோஹிங்யா கைதிகள் இதர 15பேர் மியன்மார் பிரஜைகளாவர். ஒருவர் வங்களதேசி ஆவார். அந்த முகாமில் இருந்த இதர 435 சட்டவிரோத குடியேறிகள் மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், பஹாங் மற்றும் பேராவில் லங்காப்பில் உள்ள சட்டவிரோத தடுப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர், பீடோர் சட்டவிரோத குடிநுழைவு முகாமில் 556 கைதிகள் உள்ளனர். அவர்களில் 297 பேர் ரோஹின்ய மக்களாவர். எஞ்சியோர் மியன்மார், இந்தோனேசியா , வங்காளதேசம் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த
வர்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!