Latestமலேசியா

புக்கிட் ஜாலில் திடலுக்கு hybrid புற்களை நன்கொடையாக வழங்குகிறார் ஜொகூர் அரசப் பேராளர்

ஜொகூர் பாரு, ஏப்ரல்-17, புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் திடலுக்கு hybrid வகை புற்களை நன்கொடையாக வழங்க மேன்மைத் தங்கிய ஜொகூர் அரசப் பேராளர் Tunku Ismail Sultan Ibrahim முன்வந்துள்ளார்.

இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yoh மற்றும் ஆசியக் கால்பந்து சம்மேளனம் AFC-யின் பொதுச் செயலாளர் Windsor John உடனான நேற்றையச் சந்திப்பில், ஜொகூரின் அந்த இடைக்கால சுல்தான் அம்முடிவை தெரிவித்தார்.

Johor Southern Tigers Facebook பக்கம் அத்தகவலை உறுதிப்படுத்தியது.

புக்கிட் ஜாலில் திடலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், விளையாட்டு மற்றும் விளையாட்டு அல்லாத நிகழ்வுகளை நடத்த hybrid புல்தரையே ஏற்புடையது என கண்டறியப்பட்டது.

இதையடுத்தே, ஜொகூர், லார்கின் Tan Sri Dato’ Haji Hassan Yunos அரங்கில் வளர்க்கப்பட்டு வரும் அக்கலப்பினப் புற்களை, Tunku Ismail புக்கிட் ஜாலில் தேசிய அரங்கிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளார்.

ஏற்கனவே Zeon Zoysia புற்களை புக்கிட் ஜாலிலுக்குத் தானமாக தந்து உதவிய Tunku Ismail, அந்த தேசிய அரங்கிற்கு புற்களை தனது சொந்தச் செலவில் வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.

Hybrid வகை புல்தரை புக்கிட் ஜாலிலுக்கு இறக்குமதியாவதால், அங்கு நடப்பிலுள்ள Zeon Zoysia புல்தரை அகற்றப்பட்டு, KL Sports City வளாகத்தில் உள்ள MSN திடலில் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அங்கு அடுத்தடுத்து நடந்த ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சி மற்றும் மலேசியக் கிண்ணக் கால்பந்து இறுதியாட்டத்தை
Zeon Zoysia புல்தரையால் சமாளிக்க இயலவில்லை.

திடல் மோசமான நிலையில் இருப்பதாக கால்பந்து அணிகளும் ரசிகர்களுமே கடும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!