Latestமலேசியா

புதிய MACC தலைவரை நானே தேர்வு செய்வேன் – மாமன்னர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்-23-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் புதியத் தலைவரை தாமே தேர்வு செய்யவிருப்பதாக, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

“MACC-க்கு அடுத்து தலைமையேற்க யார் சரியானவர் என்பதை நானே முடிவுச் செய்வேன்” என அறிக்கை வாயிலாக அவர் சொன்னார்.

இந்த நியமனம் அரசியலாக்கப்படக்கூடாது என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

ஊழல் தடுப்பு அமைப்பின் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பது மிக முக்கியம் எனவும் மாமன்னர் வலியுறுத்தினார்.

MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கியின் நடப்பு சேவை ஒப்பந்தம் வரும் மே 12-ஆம் தேதியோடு முடிவடையவிருக்கும் நிலையில், மாமன்னரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!