
Mathi House Production தயாரிப்பில் உள்ளூர் திரைப்பட துறையில் நன்கு அறிமுகமான அனுபவம் கொண்ட தயாரிப்பாளரும் , நடிகருமான கெடாவின் மதியழகன் மேற்பார்வையில் The Keris எனும் மலாய் வரலாற்று திரைப்படம் இவ்வாண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி மலேசியா, சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூரில் வெளியீடு காண்கிறது.
நன்கொடை நெஞ்சர் Dr சிங்கப்பூர் சின்னையா இணை தயாரிப்பாளராகவும் இயக்குனர் விக்னேஷ் பிரபு பல தொழில் நுட்ப கலைஞர்களின் மேற்பார்வையில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
வரலாற்றில் இடம்பெற்றுள்ள Hang Tuah ,Hang Jebat ,Hang Kasturi, Hang Leku போன்ற மலாய் வீரார்களின் பாரம்பரியம்,அவர்களின் தற்காப்பு கலைகளை இன்றையை மலேசியர்கள் மறந்து விடக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் தொழில் நுட்ப யுத்திகளைக் கொண்டு சண்டைக் காட்சிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் படமாக இது அமைந்துள்ளதாக தயாரிப்பாளர் குழுவினர் தெரிவித்தனர்.
இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா அண்மையில்
சுங்கை பட்டாணி Village Mall பேராங்காடி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை கெடா மாநில மந்திரி பெசார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து தாம் நடித்த சில காட்சிகளையும் பார்த்து ரசித்தார்.



