
தெலுக் இந்தான், அக்டோபர்-24,தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பேராக், தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 836,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தலைமையில், தெலுக் இந்தான் DAP நாடாளுமன்ற அலுவலகம் மூலம் இந்த மடானி அன்பளிப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் அத்தொகுதியில் உள்ள இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகள் மற்றும் 450 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட மிகப்பெரிய ‘Sumbangan Kasih MADANI’ நிதியுதவி இதுவாகும்.
இந்த உதவி, உள்ளூர் இந்து சமூகத்தின் நலனுக்கும் மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



