Latestமலேசியா

PTPTN கடன் திருப்பிச் செலுத்துதல்: RM2,501 முதல் RM3,000 வரை சம்பளம் பெறும் பட்டதாரிகளுக்கு மாதம் RM50 மட்டுமே

கோலாலம்பூர், அக்டோபர் 24,மாதம் 2,501 முதல் 3,000 ரிங்கிட் வரை சம்பளம் பெறும் பட்டதாரிகள், PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த, மாதா மாதம் குறைந்தபட்சம் 50 ரிங்கிட் மட்டுமே செலுத்தினால் போதுமானது.

2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தச் சலுகை, வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ள பட்டதாரிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, உயர் கல்வித் துணையமைச்சர் Adam Adli Abdul Halim தெரிவித்தார்.

அதே சமயம், மாதம் 2,500 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறும் பட்டதாரிகள், நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை எட்டும் வரை கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கலாம் என்றார் அவர்.

இந்த நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் 400,000-க்கும் மேற்பட்ட PTPTN கடனாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, நிலுவை வைக்காமல் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவோருக்கு 10 விழுக்காடு கழிவுச் சலுகையும் வழங்கப்படவுள்ளது.

இந்தச் சலுகைகள் இளம் பட்டதாரிகள் தங்களது வாழ்க்கைச் செலவுகளையும் நிதிப் பொறுப்புகளையும் சிறப்பாக நிர்வகிக்க உதவும் என Adam Adli நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!