Latestமலேசியா

இளம் தலைமுறையினரிடையே மலாய் மொழியின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவது சவால் – ஃபாட்லீனா சிடேக்

ஜோர்ஜ்டவுன், அக்டோபர் 24,டிஜிட்டல் தொழில்நுட்பம், ஆக்கப்பூர்வமான உள்ளடக்கங்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மூலம் மலாய் மொழியின் பயன்பாட்டை விரிவுப்படுத்தினால், அம்மொழிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் தெரிவித்துள்ளார்.

தேசிய மொழியான மலாய் மொழி, மலேசியர்களின் அடையாளம், கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையின் அடித்தளமாகத் தொடர்ந்து விளங்குவதோடு, உலகின் பிற முக்கிய மொழிகளுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பினாங்கு ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய மொழி மாதத் தொடக்க விழாவில் அவர் அவ்வாறு சொன்னார்.

அமைச்சரின் உரையை, கல்வி துணை இயக்குநர் டத்தோ Amzah Abd Malek வாசித்தார்.

குறிப்பாக, AI, சமூக ஊடகங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் விளையாட்டுகள் சூழ்ந்த உலகில் வளரும் _alpha_ தலைமுறையினரிடையே மலாய் மொழியின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவது பெரும் சவாலாக இருப்பதாக ஃபாட்லீனா குறிப்பிட்டார்.

இளம் தலைமுறையினர் மலாய் மொழியை நேசிக்க வேண்டும் என்று கூறுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் விரும்பிப் பயன்படுத்தும், பெருமைப்படும் மற்றும் தங்களது இலக்குகளை அடைய உதவும் மொழியாக அதனை உருவாக்க வேண்டும்.

அதோடு, மலாய் மொழி தேசிய அடையாளத்தின் சின்னமாக மட்டுமின்றி, அறிவியல், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் மொழியாகத் திகழ வேண்டும் என ஃபாட்லீனா வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!