
கோலாலாம்பூர், அக்டோபர்-24,பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிறைந்த ஈராக் வான்வெளியில் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விடக் குறைவாக விமானங்களை இயக்கியதற்காக Air France மற்றும் KLM விமான நிறுவனங்களுக்கு, அமெரிக்கப் போக்குவரத்து இலாகா மொத்தமாக 425,000 டாலர் அபராதம் விதித்துள்ளது.
Delta விமான நிறுவனத்தின் குறியீட்டுடன் இயக்கப்படும் விமானங்கள் இத்தகைய பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில், 32,000 அடிகளுக்குக் கீழ் ஈராக் வான்வெளியில் பறக்க அமெரிக்க கூட்டரசு விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், 2022 முதல் 2025 வரை Air France 30-க்கும் மேற்பட்ட விமானங்களையும், KLM 100-க்கும் மேற்பட்ட விமானங்களையும் இந்த ஆபத்தான வான்வெளியில் இயக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள இரு நிறுவனங்களும், உள்ளூர் வான்வெளிப் போக்குவரத்து அதிகாரிகளின் நேரடி உத்தரவின் பேரிலேயே விமானங்கள் தாழ்வாகப் பறக்க நேரிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் அந்த உத்தரவை ஏற்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளன.
என்றாலும், அவ்விரு விமான நிறுவனங்களும் தலா 265,000 டாலர்களை 60 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளன.
அதோடு, அடுத்த ஓராண்டுக்குள் மீண்டும் விதிமீறல்கள் நடந்தால் மீதமுள்ள அபராதத் தொகையும் வசூலிக்கப்படும் என அமெரிக்கப் போக்குவரத்து இலாகா எச்சரித்துள்ளது.



