Latestமலேசியா

2027 மடானி பட்ஜெட் : குறைந்தபட்ச ஊதியம் RM2,000-ஆக உயர்வு; PMKS நிறுவனங்களுக்கு தற்காலிக விலக்கு

கோலாலாம்பூர், அக்டோபர்-24,2027 மடானி பட்ஜெட்டின் கீழ், நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் RM1,700-லிருந்து RM2,000-மாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 4 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவர்.

அதேவேளை, PMKS எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இம்மாற்றத்திற்குத் தயாராக அவகாசம் தேவைப்படுவதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆண்டுக்கு RM50 மில்லியனுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் PMKS நிறுவனங்களுக்கு இப்போதைக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தவிர, பட்டதாரிகள் மற்றும் பகுதித் திறன் பணியாளர்களின் திறனைக் கௌரவிக்கும் வகையில் RM2,500 ஆரம்பக்கட்ட ஊதியமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதனிடையே, அரசு சார்ந்த GLIC மற்றும் GLC நிறுவனங்கள் தங்களின் வாழ்வாதார சம்பள அளவுகோலை RM3,100-லிருந்து RM3,400-ராக உயர்த்தியுள்ளன; இதன் மூலம் 230,000 ஊழியர்கள் பயனடைவர் என ஃபாஹ்மி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!