ஈப்போ, ஆக 9 – பேராக் புந்தோங்கில் போதைப் பொருள் தயாரிப்பு ஆய்வுக் கூடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 3337,683 ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளை பறிமுதல் செய்தனர் . இந்த நடவடிக்கையின்போது 125,000 ரிங்கிட் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ் (Azizi Mat Aris ) தெரிவித்தார். போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறையின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆகஸ்டு 7 ஆம் தேதி இரவு மணி 8.25 அளவில் ஒரு மாடி வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு போதைப் பொருள் தாயரிப்பில் ஈடுபட்டிருந்த 37 வயது ஆடவனும் கைது செய்யப்பட்டதாக அஸிஸி கூறினார்.
மேலும் அவ்வீட்டிலிருந்து பல்வேறு ரசாயனங்கள் மற்றும சாதனங்களும் பறிமுதல் செய்ப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வரி இதற்கு முன் 10 குற்றப் பின்னணிகளையும் கொண்டுள்ளான். இந்த போதைப் பொருள் தயாரிப்பு ஆய்வுக்கூடத்தில் நிச்சயம் ஒரு ஆள் மட்டும் சம்பந்தப்பட்டிருக்க முடியாது என்பதால் இதில் தொடர்புடைய இதர சந்தேகப் பேர்வழிகளையும் தாங்கள் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.