குவாலா திரங்கானு, மே-15, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் Lans Koperal நிலையிலான போலீஸ் அதிகாரி ஒருவர் குவாலா திரங்கானுவில் கைதாகியுள்ளார்.
திங்கட்கிழமை பின்னிரவு வாக்கில் ஒரு காரில் வைத்து, புக்கிட் அமான் உளவுப் பிரிவு அவரைக் கைதுச் செய்தது.
அதன் போது அவரிடமிருந்து yaba, syabu, heroine உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மதிப்பு 8,600 ரிங்கிட் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து விசாரணைக்காக அந்நபர் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் மத்தியில் போதைப்பொருள் பழக்கத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய குவாலா திரங்கானு போலீஸ் தலைவர் Datuk Mohd Khairi Khairudin, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது பாரபட்சம் இன்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.