Latestமலேசியா

போதைப் பொருள் குற்றச்சாட்டு மரண தண்டனையிலிருந்து தப்பினார் எஸ். ராஜா

கோலாலம்பூர், பிப் 21 – மரண தண்டனை விதிக்கப்படும் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் 76 கிரேம் போதைப் பொருள் விநியோகித்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுக்களிலிருந்து மெக்கனிக் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மரண தண்டனையிலிருந்து தப்பினார். எஸ்.ராஜா என்ற 49 வயதுடைய அந்த ஆடவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை நிருபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி டத்தோ Bhupindar Singh தீர்ப்பளித்தார். 76. 68 கிரோம் Methamphetamine போதைப் பொருளை வைத்திருந்ததோடு 4.14 கிரேம் Nitrazepam விஷத்தையும் வைத்திருந்ததாக ராஜா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு Taman Mas Falim மிலுள்ள வீட்டின் அறையில் இரவு 8 மணியளவில் இக்குற்றங்களை புரிந்ததாக ராஜா குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார். ராஜாவை கைது செய்த போலீஸ்காரர்கள் வழங்கிய சாட்சியத்தில் இருந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை விடுதலை செய்வதாக Bhupindar Singh தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!