Latestமலேசியா

போர்ட்டிக்சனில் பயிற்சியின்போது சக வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் காயம்

போர்டிக்சன், ஆகஸ்ட்-13-போர்டிக்சனில் நடைபெற்ற இராணுவப் பயிற்சியின் போது, சக வீரர் சுட்டதில் இராணுவ வீரர் ஒருவர் முகத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​இந்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் Sungai Menyala துப்பாக்கி சுடும் தளத்தில் நிகழ்ந்தது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக வீரரின் துப்பாக்கிச் சூட்டில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, நெகிரி செம்பிலான் போலீஸ் துணைத் தலைவர் Mohd Nasharudin Mohd Shariff கூறினார்.

​காயமடைந்த வீரர் உடனடியாக போர்டிக்சன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிரம்பான் துவாங்கு ஜஃபார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

​இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சக வீரர் கைதுச் செய்யப்பட்டு, 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொது மக்கள் இது குறித்து எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனப் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!