Latestமலேசியா

போலீ கடப்பிதழ் விவகாரம் விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று குடிநுழைவு அதிகாரிகள் தடுத்துவைப்பு

கோத்தா கினபாலு, ஜூலை 18 – சுமார் 100 விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட போலி கடப்பிதழ்கள்  விசாரணைக்காக உதவும் பொருட்டு    குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் ஆறு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோத்தா கினபாலுவிலுள்ள   MACC அலுவலகத்தில்   வாக்குமூலம் அளிக்க வந்தபோது  அமிர் ஷாரிர்  அமிர் ஹசான் ( Amir Shahril Amir Hassan)  , தானான் என்ற டேனான்  அவாங்  ( Tanan @ Denan Awang)  மற்றும்  முகமட்  நஜிமி இப்டிசம் Ag பாக்கார்  ( Mohd Najmie Ibtisam Ag Bakar) ஆகியோர்  நேற்று கைது செய்யப்பட்டனர்.  40 முதல்  50 வயதுடைய  அந்த சந்தேகப் பேர்வழிகளை தடுத்து  வைக்கும் உத்தரவை பெறுவதற்காக  மாஜிஸ்திரேட்  (Wan Farrah Fariza)  முன்னிலையில்  அவர்கள்  இன்று நிறுத்தப்பட்டனர்.  அவர்களை    ஜூலை  24 ஆம் தேதிவரை தடுத்து வைக்கும்  உத்தரவிற்கு மாஜிஸ்திரேட்  அனுமதி வழங்கினார்.

அமிர் மற்றும் தானான்  சார்பில்  வழக்கறிஞர்கள்  ஆஜராகினர்.  எனினும்  நஜ்மி சார்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை.  போலி கடப்பிதழ் கும்பல் அண்மையில் முறியடிக்கப்படும்வரை அந்த மூவரும்  2023 ஆண்டு முதல்  சுமார்  மூன்று  லட்சம் ரிங்கிட்வரை   லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது.  ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான   MACC  அதிகாரிகளால்  அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!