அலோர் காஜா, மே-10, மனைவியின் பராமரிப்பில் இருந்து வந்த சிறுவனைப் பாலியல் கொத்தடிமையாக்கி வைத்திருந்த வேலையில்லாத ஆடவன் மலாக்கா, அலோர் காஜாவில் கைதாகியுள்ளான்.
தனது மகனை அவ்வாடவன் ஈராண்டுகளாக ஓரினப் புணர்ச்சிக்கு கட்டாயப்படுத்தி வந்திருப்பதாக, 11 வயது சிறுவனின் தாயார் போலீசில் புகார் செய்ததை அடுத்து அவனின் குட்டு அம்பலமானது.
வீட்டில் இருக்கும் போது மகன் கைப்பேசியில் ஆபாச வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சியுற்ற 33 வயது தாய், சந்தேகத்தில் அவனை அதட்டிக் கேட்ட போது அவன் உண்மையைக் கூறியுள்ளான்.
குழந்தைப் பராமரிப்பாளரான பெண்ணின் கணவன் தான், ஆபாச வீடியோக்களை அச்சிறுவனத்திடத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறான்.
வீடியோவில் இருக்கும் காட்சிகளை செய்துக் காட்டுமாறுக் கூறி, மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அச்சிறுவனை அவ்வாடவன் ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தி வந்துள்ளான்.
யாருக்கும் தெரியாமல் ஈராண்டுகளாக அவன் அவ்வேலையைப் பார்த்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது
தான் வேலைக்குச் செல்வதால், தினமும் பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அப்பராமரிப்பாளரின் பொறுப்பில் தனது மகனை புகார்தார மாது விட்டுச் சென்றுள்ளார்.
மே 7-ம் தேதி கைதான நபர், 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.