Latestஉலகம்

மயில்போல பொண்ணு ஒன்னு பாடலை பாடிய இளையராஜா குடும்பத்தினர்; தேன்குரல் பவதாரணிக்கு விடை கொடுத்தனர்

சென்னை , ஜன 28 – இளையராஜாவின் மகளும் பிரபல பின்னனி பாடகியுமான பவதாரணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பபட்டு அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கடந்த 5 மாத காலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த பவதாரணி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலையில் உயிரிழந்தார். அவரது உடல் அங்கிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலக பிரமுகர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு பவதாரணியின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைபுரத்திற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. ஊர் மக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் திருவாசகம் பாடப்பட்டு பவதாரணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது. பவதாரணி பாடிய மயில்போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை குடும்பத்தினர் பாடி அவரது உடலுக்கு விடை கொடுத்தனர். பாரதி படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற அந்த பாடலுக்கு சிறந்த பின்னனி பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரணி வென்றிருந்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!