Latestமலேசியா

மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் அப்துல் ஹடி அவாங் அறிக்கை; சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

ஷா அலாம், பிப் 29 – மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங் வெளியிட்ட அறிக்கை குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கவலையையும் எச்சரிக்கையையும் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாத்தின் மாண்பு தற்காக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் சமயத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலாய் ஆட்சியாளர்களுக்கு ஹடி அவாங் பிப்ரவரி 20 ஆம் தேதி அந்த அறிக்கையை எழுதியிருந்தார்.

சிலாங்கூர் பாஸ் தலைவர் டத்தோ டாக்டர் Abdul Halim, Tamuriக்கு சிலாங்கூர் சுல்தான் Sharafuddin எழுதியிருக்கும் கடிதத்தில் தமது கவலையை தெரிவித்திருப்பதாக அவரது அந்தரங்க செயலாளர் டத்தோ Muhamad Munir Bari கூறியுள்ளார்.

பிப்ரவரி 15ஆம் தேதி மலேசிய இஸ்லாமிய தேசிய சமய மன்ற கூட்டத்தில் தாம் ஆற்றிய உரையை முழுமையாக படிக்காமல் ஹடி அவாங் அறிக்கை வெளியிட்டுள்ளதாக Sultan Sharafuddin தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு கிளந்தான் இஸ்லாமிய சட்டத்தில் இடம்பெற்றிருந்த 16 பிரிவுகளை எதிர்த்து Nik Elin கூட்டரசு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த கருத்தை சிலாங்கூர் சுல்தான் சுட்டிக்காட்டினார். மலாய் ஆட்சியாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனையை மதிக்கும் மலாய்ககாரர்களின் பண்பாட்டிற்கு எதிரான கலாச்சரத்தை ஹடி அவாங் எழுதியிருந்த கடிதம் பிரதிபலித்திருப்பது குறித்து சுல்தான் தமது ஏமாற்றத்தை தெரிவித்தார்.

இஸ்லாமிய கோட்பாட்டிற்கு எதிராக கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்ட நீதிபதிகள் தவறிவிட்டதாக ஹடி அவாங் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் காலணித்துவ ஆட்சியாளர்களின் சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு நீதிபதிகள் மதிப்பு அளிப்பதோடு சமயம் இனம், மொழி மற்றும் நாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கத் தவறுவதாக ஹடி அவாங் தெரிவித்திருந்தார்.

அவரது அந்த கடிதத்தின் உள்ளடக்கம் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு இந்நாட்டிலுள்ள மலாய்க்காரர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இத்தகைய அறிக்கை ஏற்படுத்திவிடும் என்பதையும் சுல்தான் சுட்டிக்காட்டியிருந்ததாக Muhamad Munir தெரிவித்தார்.

1957 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது முதல் நாட்டின் பிரதான சட்டமாக கூட்டரசு அரசிலமைப்பு சட்டம் இருக்கும்போது அரசியலமைப்பு சட்டத்தை முன்னிறுத்தி பல முறை நாடாமன்ற உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான ஹடி அவாங் இப்போது அது குறித்து கேள்வி எழுப்புவது ஏன் என்றும் சிலாங்கூர் சுல்தான் வினவியுள்ளார்.

மலாய்க்காரர்களின் ஆதரவு பெறும் நோக்கத்தில் ஹடி அவாங் தமது கடிதத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனவே எதிர்காலத்தில் அறிக்கையை வெளியிடும்போது மலாய் ஆட்சியாளர்களின் அவமதிக்கும் நடவடிக்கையில் மீண்டும் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என சிலங்கூர் சுல்தான் எச்சரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!