Latestமலேசியா

மலேசியாவின் முதன்மை தமிழ் செய்தி நிறுவனம் – ஒட்டுமொத்தமாக 1 மில்லியன் பின் தொடர்பாளர்களை பிடித்தது வணக்கம் மலேசியா

கோலாலாம்பூர், ஜூன் 6 – மலேசிய தமிழ்ச் செய்தி ஊடகங்களில் எவரும் எட்டாத சாதனையை வணக்கம் மலேசியா எட்டி சாதனை படைத்துள்ளது.

தனது 21ஆம் நிறைவாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள வணக்கம் மலேசியா, முகநூல், Instagram, TikTok, Youtube என சமூக ஊடகங்கள் வழி, நேற்றுடன் ஒட்டுமொத்தமாக 1 மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்றுள்ளது.

அதே சமயத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் முதன்மை இலக்கவியல் தமிழ்ச் செய்தி நிறுவனமான வணக்கம் மலேசியா, மாதத்திற்கு 80 மில்லியன் பார்வைகளுடன் மலேசியாவின் முதன்மையான மற்றும் பிரதான தமிழ் செய்தி ஊடகமாகவும் வலம் வருகிறது.

மகத்தான மைல்கல்லை எட்டிய வணக்கம் மலேசியாவிற்கு மகுடம் சூட்டிய மக்களுக்கு, இன்னும் தொடர்ந்து பயனுள்ள, நம்பக்கத்தன்மையான தரமான செய்திகளை வழங்க வேண்டும் என்ற கடப்பாட்டோடு தொடர்ந்து செயல்படும் என வனக்கம் மலேசியா உறுதியளித்துள்ளது.

எங்கும் எப்போது வணக்கம் மலேசியா

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!