Latestமலேசியா

மலேசியாவின் AI மற்றும் XR தொழில்நுட்பத் திறன்களை வளர்க்க XR Summits – MSU பல்கலைக்கழகம் இடையே மெகா கூட்டணி

ஷா ஆலாம், ஜூன்-17-மலேசியாவில் AI, XR மற்றும் Spatial Computing போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்காக, XR Summits நிறுவனம் மற்றும் MSU பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

​ஷா ஆலாமில் நடைபெற்ற MSU iReX 2026 கண்காட்சியின் நிறைவு விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் புவான் ஸ்ரீ Dr ஜுனைனா அப்துல் ஹமிட் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

​அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 22 உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் MSU செய்துகொண்டுள்ள மெகா கூட்டணியின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இந்த நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 534 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

​இந்தக் கூட்டு ஒத்துழைப்பின் மூலம், மாணவர்களுக்கு AI திரைப்படத் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இது மலேசியாவை ஆசிய வட்டாரத்தின் டிஜிட்டல் உள்ளடக்க தயாரிப்பு மையமாக மாற்றுவதற்கும், வரும் டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் XR ASIA SUMMIT 2026 மாநாட்டுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என XR Summits நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லூயிஸ் குளோவிஸ் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!