Latestமலேசியா

மலேசியா இந்திய உயர் ஆணையத்தின் மகளிர் தினக் கொண்டாட்டம்; பாலின இடைவெளி குறியீட்டில் மலேசியா 93வது இடம்

கோலாலம்பூர், மார்ச் 10 – மலேசியா இந்திய உயர் ஆணையம் நேற்று சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடியது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ நளினி பத்மநாதன், மலேசிய இந்திய உயர் ஆணையர் தலைவர் ‘B.N.Reddy’ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

‘மனித வாழ்வின் அன்றாட தேவைகளிலும் சேவைகளிலும் உடன் வரும் பெண்களை மதிப்பதற்கும் போற்றி வரவேற்பதற்கும் ஆண்டுதோறும் மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது’ என மலேசிய இந்திய உயர் ஆணையர் தலைவர் ‘B.N.Reddy’ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு உரை வழங்கிய மலாயா தலைமை கூட்டரசு நீதிமன்ற நீதிபதியான நளினி பத்மநாதான், ‘உலகளவில் 146 நாடுகளில் மலேசியா பாலின இடைவெளி குறியீட்டில் 93ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக’ சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வந்திருந்த 7 மகளிர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மகளிர் தின கொண்டாட்டம் கலச்சார நிகழ்ச்சிகளுடன் ‘Ms Shailaja Menon’ அவர்கள் கைவண்ணத்தில் மலர்ந்த ‘Breathe Bend Be’ என்ற புத்தக வெளியிட்டுடன் நிறைவடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!