Latestமலேசியா

மலேசிய ஆயுதப் படை அடுத்த மாதம் தனது முதல் Black Hawk ஹெலிகாப்டரைப் பெறலாம்

கோலாலம்பூர், மார்ச்-20, மலேசிய ஆயுதப்படை அடுத்த மாத வாக்கில் தனது முதல் Black Hawk ஹெலிகாப்டரைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TDM பயன்பாட்டுக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள நான்கு Sikorsky UH-60A+ Black Hawk ரக ஹெலிகாப்டர்களில் முதல் ஹெலிகாப்டர் ஏப்ரலில் வந்திறங்கும் என, TDM தலைமைத் தளபதி முஹமட் ஹஃசுடியான் ஜன்தான் தெரிவித்தார்.

உண்மையில் கடந்தாண்டு நவம்பரிலேயே அந்த ஹெலிகாப்டரை நாம் பெற்றிருக்க வேண்டும், ஆனால் குத்தகையாளர் மற்றும் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தை உட்படுத்திய சில விஷயங்களால், அது வந்துச் சேருவது தாமதமடைந்தது.

எனினும், ஏப்ரலில் நிச்சயம் அது தருவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதால், இம்முறை நிச்சயம் அது தவறாது என தாம் எதிர்பார்ப்பதாக ஹஃசுடியான் சொன்னார்.

பயிற்சி மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காக அந்த ஹெலிகாப்டர் தரைப்படைக்கு அவசியம் தேவைப்படுவதாக அவர் விளக்கினார்.

18 கோடியே 70 லட்சம் ரிங்கிட்டுக்கு, அந்த 4 ஹெலிகாப்டர்களை ஐந்தாண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்க ஏதுவாக, உள்ளூர் நிறுவனமான Aerotree Defence & Services Sdn Bhd -டுடன் தற்காப்பு அமைச்சு கடந்தாண்டு மே மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!