Latestமலேசியா

மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் RM10,000 நிதி உதவி வழங்கினார் டான் ஶ்ரீ நடராஜா

கோலாலம்பூர், ஜூன் 4 –ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பாக டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்கள் மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்காக RM 10,000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளார்.

கடந்த ஜூன் 2ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமையன்று, தலைநகரில் அமைந்துள்ள கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலின் திருப்பணி தொடக்க பூஜையில், இந்த நிதி இந்து சங்கத் தேசியத் தலைவர் தங்க கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு மலேசிய இந்து சங்கத்தில் தலைவராக பதவி ஏற்ற நாள் முதல், தனக்கு என்றும் பக்கப் பலமாக இருந்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்ற, டான் ஸ்ரீ ஆர்.நடராஜாவிற்கும் தேவஸ்தானத்திற்கு, இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறிய தங்க கணேசன், இந்நிதி மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்கும், தொடர் நிர்வாக நடவடிக்கைக்கும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!