Latestமலேசியா

மலேசிய நவீன மனநல மருத்துவத்தின் தந்தை தான் ஸ்ரீ Dr எம். மகாதேவன் 96 வயதில் காலமானார்

அம்பாங், ஜூன்-17-மலேசியாவின் நவீன மனநல மருத்துவத் துறையின் தந்தை என போற்றப்படும் மூத்த மனநல மருத்துவர் தான் ஸ்ரீ Dr எம். மகாதேவன், தமது 96-வது வயதில் காலமானார்.

​இதய மற்றும் நுரையீரல் பாதிப்புகள் காரணமாக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு அம்பாங்கில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

​நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் வேண்டுகோளுக்கு இணங்க, 1967-ஆம் ஆண்டு அயர்லாந்திலிருந்து மலேசியா திரும்பிய Dr மகாதேவன், நாட்டின் மனநல மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

புகழ்பெற்ற உலு கிந்தா பஹாகியா மருத்துவமனையின் முதல் இயக்குநராகவும், மலேசிய மனநல மருத்துவ சங்கத்தின் நிறுவனராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

​அன்னாரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 9.30 மணிக்கு அவரது இல்லத்தில் தொடங்கி, மதியம் 12 மணியளவில் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!