Latestமலேசியா

மலேசிய ஹாக்கிக் குழுவின் பயிற்சிக் குழு தலைவர் பதவிக்கு; தர்மராஜ் உட்பட 23 பேர் மனு

கோலாலம்பூர், பிப் 19 – தேசிய ஹாக்கிக் குழுவின் பயிற்சிக் குழு தலைவர் பதவிக்கு இந்தோனேசிய தேசிய ஹாக்கிக் குழுவின் நடப்பு தொழிற்நுட்ப இயக்குனரான மலேசியாவின் கே.தர்மராஜ் உட்பட 23 பேர் மனு செய்துள்ளனர். இவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 18 பயிற்சியாளர்களும் அடங்குவர். மலாக்காவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டாளருமான தர்மராஜ் தாம் ஏற்கனவே தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் குழுக்கள் உட்பட தேசிய மகளிர் குழுவுக்கும் பயிற்சியாளராக பணியாற்றியிருப்பதோடு பல வெற்றிகளையும் தேடித்தந்திருப்பதாக கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு சுல்தான் Johor கிண்ண ஹாக்கிப் போட்டியில் வெற்றியாளர் விருதையும், 2012 ஆம் ஆண்டு ஆசிய ஜூனியர் கிண்ண வெற்றியாளர் விருது மற்றும் 2013ஆம் ஆண்டு ஜூனியர் உலக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் தமது தலைமையில் இயங்கிய மலேசிய ஹாக்கிக் குழு 4 ஆவது இடத்தை பெற்றதையும் 55 வயதுடைய தர்மராஜ் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை மலேசிய தேசிய ஹாக்கிக் குழுவின் பயிற்சியாளராகவும் இருந்துள்ள தர்மராஜ் 2014ஆம் ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியிலும் தமது தலைமையிலான மலேசிய ஹாக்கிக்குழு இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். 2023 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியில் அவரது பயிற்சியின் வழிகாட்டியில் இந்தோனேசிய ஆடவர் ஹாக்கிக் குழு மூடரங்கு ஹாக்கிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!